

கரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக ரித்து வருவதால், விடுதி உரிமை யாளர்கள் முதல் சிறு வியாபாரிகள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும். இந்த ஆண்டு மார்ச் இறுதியில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகையின்றி விடுதி உரிமையாளர்கள் முதல் சாலையோர வியாபாரிகள் வரை பாதிப்படைந்தனர்.
இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும், இ-பாஸ் பெற்றுத்தான் கொடைக்கானல் வரவேண்டும் என அரசு அறிவித் ததால் பாதிப்பு தொடர்ந்தது. இதிலும் தளர்வு அறிவிக்கப்பட்டு தற்போது இ -பதிவு முறை உள்ளது. சுற்றுலாத்தலங்களை முழுமை யாகத் திறந்து தளர்வுகளை அறிவித்தாலும் கரோனா காரணமாக கூட் டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், சுற்றுலாப் பய ணிகள் வருகை தொடக்கத்தில் மிகவும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் வார விடுமுறையுடன் சேர்ந்து தொடர் விடுமுறை வரும் நாட்களில் கொடைக்கானலுக்குச் சுற்றுலா பயணிகள் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இத னால் விடுதிகள் பெரும்பாலும் நிரம்பி விடுகின்றன. ஏரிச்சாலை யில் சைக்கிள் வாடகைக்கு விடுபவர் கள், சிறுவர்களுக்கான பலூனை துப்பாக்கியால் சுடும் கடை வைத்திருப்பவர்கள், குதிரை சவாரி செய் வதற்காக குதிரை வைத்திருப்ப வர்கள், சுற்றுலாத்தலங்களில் கடை வைத்திருப்பவர்கள், ஓட்டல்கள் என அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் 9 மாதங்களுக்குப் பிறகு வருவாய் கிடைத்து வருகிறது இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.