

சென்னை அண்ணாசாலையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளது. கல்லூரியில் படிக் கும் மாணவிகளில் 100-க்கும் மேற் பட்டோர், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் மாணவிகள் அனுமதிக் கப்பட்டனர். மாணவிகளுக்கு டாக் டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக குண மடைந்து மருத்துவமனையில் இருந்து கல்லூரி விடுதிக்கு திரும் பினர். இதுபற்றிய தகவல் அறிந்த தும் உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலு வலர் எஸ்.லட்சுமி நாராயணன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சதாசிவம், கண்ணன், ராஜபாண்டி, ராஜா முகமது, மணிமாறன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு கல்லூரியில் ஆய்வு நடத்தினர்.
உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் எஸ்.லட்சுமி நாராயணன் இது தொடர்பாக கூறியதாவது:
கல்லூரி விடுதியில் சுமார் 400 மாணவிகள் தங்கியுள்ளனர். மதியம் சாம்பார் சாதம், பீட்ரூட் பொரியல் மற்றும் இரவில் சாப்பிட்ட உணவில் எதுவும் பிரச்சினை இல்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவிகளுக்கு முட்டை குருமா கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் பிரச்சினை இருப்பதாக சந்தேகிக்கின்றோம். அதனால் முட்டை குருமா மாதிரி, தண் ணீர் மற்றும் எண்ணெய் வகைகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்று இருக்கிறோம். பரிசோதனை முடிவுகள் 14 நாட்களில் வந்துவிடும். வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு காரண மாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட 20 மாணவிகள், ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 21 மாணவிகள் என 41 மாணவிகளும் குணமடைந்து கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.