

சில நாட்களுக்கு முன் புரட்டி எடுத்த பெரும் புயலில் சிதம்பரத்தை ஒட்டியுள்ள வெள்ளநீர் வடிகால் பகுதியான கவரப்பட்டு, வீரன்கோவில்திட்டு, கீழப்பெறம்பை,திடல்மோடு, கீழதிருக்கழிப்பாளை, மேலதிருக்கழிப்பாளை, அம்பிகாபுரம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
வெளியே வர முடியாமல் தத்தளித்த அப்பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு தொடர்ந்து தொடர்ந்து 5 நாட்களாக மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
இதற்காக, கவரப்பட்டில் உள்ள அவரது வீட்டில் பெரிய அண்டாக்களில் உணவு தயார் செய்யப்பட்டு, டிராக்டர் மற்றும் மினிடெம்போ மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உணவு விநியோகம் செய்யப்பட்டது. ஸ்ரீதர் வாண்டையாரின் தந்தையார் காலத்தில் இருந்தே மழை வெள்ள காலங்களில் இக்குடும்பத்தினர் இந்தச் சேவையை செய்து வருவதை குறிப்பிட்டுச் சொல்கின்றனர் உள்ளூர்வாசிகள்.