Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

22 சிறப்பு ரயில்கள் சேவை; ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 22 சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொச்சுவேலி - மைசூர் (06316/06315), மங்களூரு - மும்பை லோகமான்ய திலக் (02620/02619) ஆகிய தினசரி ரயில்கள், வாரம் 2 முறை இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை (06352/06351), எர்ணாகுளம் - ஓகா (06338/06337) ரயில்கள் ஜனவரி இறுதி வரை நீட்டித்து இயக்கப்படுகின்றன.

மதுரை - பிகானேர் (06053/06054), கொச்சுவேலி - இந்தூர் (02646/02645), சென்னை எழும்பூர்- ஜோத்பூர் (06068), ராமேசுவரம் - ஓகா (06733), திருநெல்வேலி - பிலாஸ்பூர் (06070), திருநெல்வேலி - மும்பை தாதர் (06072/06071), காந்திதாம் - திருநெல்வேலி (09424/09423) வாராந்திர ரயில்கள் உட்பட மொத்தம் 22 சிறப்பு ரயில்களின் சேவை வரும் ஜனவரி இறுதி வரை நீ்ட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x