பனி காலத்தில் நோய் தாக்கும் அபாயம்: உளுந்து, மணிலா பயிர்களை பாதுகாப்பது எப்படி?

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை போதிய அள வில் பெய்துள்ளது. மழையைத் தொடர்ந்து பனி மற்றும் குளிர்ந்த பருவநிலை உள்ளது. இச்சூழலில் உளுந்து மற்றும் பயறுவகை பயிர்கள் 30, 110 ஹெக்டேர் பரப்பிலும், மணிலா 3,165 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பனிகாலத்தில் இப்பயிர்களை நோய் கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

இப்பருவத்திற்கான பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து வேளாண் இணை இயக்குநர் ரமணன் வெளியிட்டுள்ள தகவல் கள் வருமாறு:

உளுந்து பயிரில் ‘ஆந்தராக் னோஸ்’ நோய் தாக்கினால் பாதிக்கப்பட்ட பயிரின் பாகங்களை அகற்றி, அழிக்க வேண்டும். அத்துடன், மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் அல்லது கார்பன்டசிம் 0.5 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். துரு நோய் தாக்கினால் மான்கோசெப் 2.5 கிராம்/லிட்டர் தெளிக்க வேண்டும்.

மணிலா பயிரில் தண்டழுகல் நோய் தாக்கினால் கார்பன்டாசிம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 1 கிராம் / லிட்டர் நீரில் கரைத்து பாதிக்கப்பட்ட செடிகளை சுற்றி, மண்ணின் மேல் தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய் தாக் கினால் கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்கவும்.

குளோரோதலோனில் 0.2 சதவீதம் அல்லது மேங்கோசெப் 0.25 சதவீதம் அல்லது ஹக்சகொனசோல் அல்லது புரோப்பி கொனசோல்யைப் பயன் படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in