Published : 30 Oct 2015 07:50 AM
Last Updated : 30 Oct 2015 07:50 AM

கடத்தப்பட்டதாக கூறப்பட்டமருத்துவ மாணவர் மீட்பு: பெற்றோரிடம் பணம் பறிக்க நாடகமாடியது அம்பலம்

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார்.

சென்னை தாம்பரம் வெங்க டேசன் தெருவில் வசிப்பவர் ரியாஸ். இவரது மனைவி வகிதா. இருவரும் டாக்டர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களின் மகன் அஜ்மல் அஸ்லாம்(20). குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 27-ம் தேதி கல்லூரிக்கு சென்றப்அஜ்மல் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் 28-ம் தேதி காலை வகிதாவின் செல்போனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், "அஜ்மல் அஸ்லாமை கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.50 லட்சம் கொடுத்தால் அவரை விட்டு விடுகிறோம். கடத்தல் குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித் தால் அஜ்மலை கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வகிதா, குரோம்பேட்டை போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அஜ்மலை மீட்கும் முயற்சி யில் இணை ஆணையர் அருண் தலைமையிலான போலீஸார் இறங் கினர். ரூ.50 லட்சம் பணத்துடன் தாம்பரம் அருகேயுள்ள ஓர் இடத்துக்கு கடத்தல்காரர்களை வரச்சொல்லியுள்ளனர். அவர்கள் சந்தேகப்பட்டு அங்கே வராமல் இடத்தை மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் அஜ்மல் நேற்று இரவு 7.30 மணியளவில் தந்தை ரியாஸுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நான் ராம நாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருக்கிறேன். என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல காரை அனுப்புங்கள்" என்று அழுது கொண்டே கூறியதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. உடனே ராமநாதபுரத்தில் உள்ள உறவினர்கள் மூலம் காரை ஏற்பாடு செய்து அஜ்மலை சென்னை அழைத்து வர ரியாஸ் ஏற்பாடு செய்தார். நடந்த சம்பவங்கள் குறித்து பரங்கிமலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அஜ்மலின் பெற்றோரிடம் பணம் பறிப்பதற்காக அஜ்மல் மற்றும் அவரது நண்பர்கள் திட்டம் போட்டுள்ளனர். இதற்காக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அஜ்மலின் பள்ளிப்பருவ நண்ப ர்கள் 2 பேரும், கல்லூரி நண்பர் கள் சிலரும் இந்த கடத்தல் நாடகத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். தீவிரமாக கண்காணித்து அஜ்மலை ராம

நாதபுரத்திலிருந்து மீட்டோம்.

அஜ்மலின் நண்பர்கள் சென்னை மடிப்பாக்கம், தாம்பரம், பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு அஜ்மலின் தாயார் வகிதாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரே நேரத்தில் எப்படி பல இடங்களில் இருந்து பேச முடியும், அஜ்மல் உண்மையில் எங்கு இருக்கிறார் என்று போலீஸையே குழம்ப வைத்து அலைய விட்டுவிட்டனர்.

பல்வேறு இடங்களில் இருந்து செல்போன் அழைப்புகள் வரும் போதெல்லாம் அங்கு போலீஸ் படையை அனுப்பி சோதனை நடத்தினோம். மடிப்பாக்கத்தில் இருந்து மிரட்டிய அஜ்மலின் பள்ளி நண்பரின் முழு விவரங்களும் கிடைத்து விட்டது. மேலும் சிலரின் விவரங்களும் கிடைத்துவிட்டன. கடத்தல் நாடகத்துக்கு உடந் தையாக இருந்த அஜ்மலின் நண்பர்கள் ஹாலிக், சூர்யா ஆகிய இருவரை சுற்றி வளைத்து பிடித்துவிட்டோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x