2ஜி தீர்ப்புக்குப் பின் நீலகிரி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஹெச்.ராஜா பேச்சு

2ஜி தீர்ப்புக்குப் பின் நீலகிரி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஹெச்.ராஜா பேச்சு
Updated on
1 min read

‘‘2 ஜி வழக்கில் தீர்ப்புக்குப் பிறகு நீலகிரி , தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல்,’’ என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த பாஜக தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி வழிகாட்டுதல் ஆட்சி தமிழகத்திற்குத் தேவை. 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்போது நீலகிரி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். அத்தேர்தல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுடன் நடத்தப்படும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக தீய சக்திகளின் கூடாரம். வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சட்டம். இது அவர்களுக்கு வருவாயை தான் அதிகரிக்கும்.

எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தான் போராட்டம் நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றி தற்காலிகம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in