Published : 02 Oct 2015 10:26 AM
Last Updated : 02 Oct 2015 10:26 AM

லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: சரக்குகள் முடங்கும் அபாயம் - ஒரே நாளில் ரூ.450 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தால் சரக்குகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 450 கோடி மதிப்புள்ள சரக்குகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும், லாரி வாடகையில் டி.டி.எஸ். பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.9 லட்சம் லாரிகள் இயக்கப்படு கின்றன. இதில், 2.93 லட்சம் லாரிகள் தமிழகத்துக்குள் இயக்கப்படுகின் றன. 89,438 லாரிகள் தேசிய அளவில் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக 60 சதவீத லாரிகள் நேற்று இயக் கப்படவில்லை. மீதமுள்ள லாரி களும் இன்று முற்றிலும் நிறுத்தப் படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 450 கோடி மதிப்புள்ள சரக்குகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே. நல்லதம்பி ‘தி இந்து’ விடம் கூறும்போது, “இந்த போராட் டத்தால் நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 60 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால், லாரி உரிமையாளர்களுக்கு 10.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டீசல் வரி விதிப்பு, வணிக வரி உள்ளிட்ட வரிகள் மூலம் தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங் களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும். இந்த பிரச் சினையில் பிரதமர் மோடி தலை யிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தின் தலைவர் ஆர்.சுகுமார் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “சுங்கச் சாவடிகளை முறைப்படுத்த வேண்டும், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது பொருட்களை கடத்துபவர்கள் மீதும், லாரி ஓட்டுநர்களை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடும் கொள்ளையர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் தலைமை செயலகத்தில் வரும் 5-ம் தேதியன்று பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம்” என்றார்.

முட்டைகள் தேக்கம்

நாமக்கல்லில் நாளொன்றுக்கு 3.25 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டையில் 1 கோடி முட்டைகள் வரை நாள்தோறும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. லாரி வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கேரளாவுக்கு அனுப் பப்படும் முட்டை தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x