

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், இளம்பெண்கள் பாசறைமற்றும் இளைஞரணி நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் மேற்கு மாவட்டச் செய லாளர் அருண்மொழித்தேவன் தலைமையில் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கினர். அதையடுத்து விழுப்பு ரம் மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியது:
எம்ஜிஆர், ஜெயலலிதா என்றமிகப்பெரிய ஆளுமை இல்லாதநிலையில் தேர்தலை சந்திக்கி றோம். இத்தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். நமது சின் னத்தை முடக்க சிலர் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். நமது கட்சியில், சில தலைவர்கள் வேண்டுமானால் கட்சிக்குத் துரோகம் செய்திருக் கலாம். ஆனால், தொண்டர்கள் எவரும் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். கட்சியினருக் கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். கருத்து வேறு பாட்டை சற்று தள்ளிவைத்து தேர்தல் பணியில் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம்.
தற்போது, யார் யாரோ ‘நான் தான் எம்ஜிஆரின் வாரிசுகள்’ எனசொல்லித் திரிகின்றனர். அவர்க ளுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எம்ஜி ஆரின் வாரிசு என்றால் அது இரட்டை இலை மட்டுமே என்றார்.
முன்னதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் அருண் மொழித்தேவன் பேசுகையில்,” மக்கள் மத்தியின் முதல்வர் பழனி சாமிக்கு எளிமையான முதல்வர் என்ற முத்திரை உள்ளது. திமுக குடும்ப உறுப்பினர்களும் நம் முதல்வரின் அபிமானிகளாக உள்ளனர். அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்” என்றார்.
“விருத்தாசலம் தொகுதி அதிமுகவிற்கு சாதகமான தொகுதி; 7 முறை வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக் கக் கூடாது” என கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி கள் வலியுறுத்தினர்.