Published : 29 Oct 2015 03:41 PM
Last Updated : 29 Oct 2015 03:41 PM

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நெல்லிக்கனி: பொதுமக்கள் விழிப்புணர்வால் மீண்டும் மவுசு

மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்கனிக்கு, தமிழக சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஆண்டு முழுவதும் நிரந்தர வருவாயால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், கரூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல்லிக்கனி சாகுபடி நடக்கிறது. ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லிக்காய் உற்பத்தியாகிறது. நெல்லிக்கனியில் 25 வகை ரகங்கள் இருந்தாலும் விவசாயிகள் பெரும்பாலும் பிஎஸ்ஆர்-1, என்ஏ-7 ரகங்களை விரும்பி சாகுபடி செய்கின்றனர். நெல்லிக்கனி விற்பனைக்கு சென்னை கோயம்பேடு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பிரதான சந்தைகள் செயல்படுகின்றன. நெல்லிக்கனியில் இருந்து அதிகளவு மதிப்புக்கூட்டும் உணவுப் பொருட்கள், பழ பானங்கள், ஊறுகாய், சோப்பு மற்றும் நறுமண பாக்குகள் தயாரிக்கப்படுகிறது.

நெல்லிக்கனியில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வால் பொதுமக்களும் தற்போது விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். அதனால், ஆண்டு முழுவதும் தமிழக சந்தைகளில் நெல்லிக்கனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கிறது. தற்போது ரகம், தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ நெல்லிக்கனி ரூ. 15 முதல் அதிகபட்சம் ரூ. 30 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலைய உணவியல் உதவிப் பேராசிரியர் ஆ. கலைச்செல்வன் கூறியது:

ஒரு நெல்லி மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 கிலோ நெல்லிக் கனிகள் கிடைக்கின்றன. இந்த மரங்களில் அதிகளவு மகரந்தச் சேர்க்கை நடப்பதால் ஒரே இடத்தில் இரண்டு, மூன்று ரக நெல்லி மரங்களை சாகுபடி செய்வது நல்லது. தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு நெல்லிக்கனிகள் ஏற்றுமதியாகின்றன. தற்போது உள்நாட்டு தேவைக்கே அதிகளவு நெல்லிக்கனி தேவைப்படுவதால் ஏற்றுமதி குறைவுதான். இதன் மகசூல் காலம் ஜனவரி, மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்றாலும், ஆண்டு முழுவதும் மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புற்றுநோயை தடுக்கலாம்

இதுகுறித்து ஆ. கலைச் செல்வன் மேலும் கூறுகையில், நெல்லிக்க னியின் சத்துகள், மருத்துவக் குணங்கள் பற்றிய விழிப்புணர்வு, தற் போது ஏற்படத் தொடங்கி உள்ளது. அதனால், தொ ழில் முனைவோர் முதல் குடும்பத் தலைவிகள், பட்டதாரி இளைஞர்கள் தற்போது நெல்லிக்கனி மதி ப்புக் கூட்டுதல் உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடு படத் தொடங்கி உள்ளனர். பொதுவாக புற்றுநோய்கள் உணவுப்பழக்க முறையால் வருகிறது. நெல்லிக்கனி சாப்பி ட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x