அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நேர்முகத்தேர்வில் பங்கேற்காதவர் வென்றதாக அறிவிப்பு; முறைகேடு என புதுச்சேரி ஆளுநரிடம் புகார்

அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நேர்முகத்தேர்வில் பங்கேற்காதவர் வென்றதாக அறிவிப்பு
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நேர்முகத்தேர்வில் பங்கேற்காதவர் வென்றதாக அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி அரசு மகாத்மாகாந்தி பல் மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வில் பங்கேற்காத மருத்துவரின் பெயர், அத்தேர்வில் வென்றதாக இடம்பெற்றுள்ளதே இக்குற்றச்சாட்டுக்கு காரணமாகும்.

புதுவை மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதில், நேர்முகத் தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நேற்று (டிச. 24) வெளியிடப்பட்டது. இதில், ரேடியாலஜி உள்ளிட்ட துறைகளுக்கு முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் நேர்முகத்தேர்வில் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை கல்லூரி டீன் கென்னடிபாபு வெளியிட்டார். அந்த பட்டியலில் உதவி பேராசிரியர் பணிக்கு நேர்முகத்தேர்வுக்கே அழைக்கப்படாத மருத்துவர் பரிமளா என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் பிற பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேர்முகத்தேர்வுக்கு அழைப்பே இல்லாத ஒருவர் பெயர் எவ்வாறு தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த முறைகேடு குறித்து ஆதாரங்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in