3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சிட்லபாக்கம் துணை மின் நிலைய பணி: மின் விநியோகம் பாதிப்பால் மக்கள் அவதி

3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சிட்லபாக்கம் துணை மின் நிலைய பணி: மின் விநியோகம் பாதிப்பால் மக்கள் அவதி
Updated on
1 min read

சிட்லபாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சிட்லபாக்கம், குரோம்பேட்டை, சானடோரியம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன. அதி வேகமாக வளர்ந்துவரும் இந்தப் பகுதிகளுக்கு தாம்பரம் கடப்பேரி, மாடம்பாக்கம், ராதா நகர் போன்ற பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அதிகரித்து வரும் குடியிருப்புகளால் சீராக மின் விநியோகம் செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. அறி விக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சிட்ல பாக்கம் பேரூராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்க்க, சிட்லபாக்கம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. வேகமாக தொடங் கிய இந்தப் பணி, 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை உள்ளது.

பெரும்பாலான வீடுகளில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு அதி கரித்துள்ளதால் ஓவர்லோடு பிரச்சினை எழுந்துள்ளது. இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் இரவில் தூங்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சிட்லபாக்கம் துணை மின் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சிட்லபாக் கம் துணை மின் நிலையம் அமைப் பதற்கான பொறுப்பாளரிடம் கேட்ட போது, ‘‘துணை மின் நிலையத் துக்கு தேவையான பொருட் கள் வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. வரும் ஜனவரி மாதத்துக் குள் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுவிடும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in