

கடந்த தீபாவளி பண்டிகையின்போது 2,300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வரும் தீபாவளிக்கும் தேவையைப் பொருத்து சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது. பலருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள் ஒருநாள் விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் தொடர்ந்து ஊரில் தங்கிவிட்டு வரலாம் என திட்டமிட வாய்ப்பு உள்ளது.
தீபாவளி பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களுக்கு வழக்க மாக செல்லும் விரைவு ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு முடிந்துவிட்டது. இதற் கிடையே தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது. அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிடுவதால், பெரும்பாலா னோர் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு விரைவு பஸ்களிலும் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். கடந்த தீபாவளி பண்டி கையின்போது 2,300-க்கும் மேற் பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன. வரும் தீபாவளிக்கும் தேவையைப் பொருத்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட் டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழகங்களின் உயர் அதி காரிகளிடம் கேட்ட போது, ‘‘அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆயி ரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அடுத்த 2 வாரங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டில் சிறப்பு பஸ் களை இயக்குவது, முன்பதிவுக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுடன் ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. அதன்பிறகு, சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்பாக அரசு அறிவிக்கும். பண்டிகை நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில் போலீஸாருடனும் ஆலோசனை நடத்தவுள்ளோம்’’ என்றனர்.