செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரியார் 47-வது நினைவு நாள் அனுசரிப்பு

பெரியார் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Updated on
1 min read

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பெரியார் நினைவு நாளை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெரியார் சிலைகள் மற்றும்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி அனுசரித்தனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் மற்றும் மறைமலைநகர் பகுதிகளில், திராவிடர் கழக நிர்வாகிகள் கோ.நாத்திகன், மோகன்ராஜ், மா.குணசேகரன் மற்றும் துரை. முத்து, சிங்கபெருமாள், கருணாகரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் -வேலூர் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் திமுக நகரச் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியச் செயலர் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மதிமுகமாவட்டச் செயலர் வளையாபதி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பொன்னேரி, ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர், திமுக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பினர் பெரியார் படத்தை வைத்து, மாலைஅணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in