ஒரு நோட்டு.. ஒரு ஓட்டு: சென்னையில் பாஜக பிரச்சாரம்

ஒரு நோட்டு.. ஒரு ஓட்டு: சென்னையில் பாஜக பிரச்சாரம்
Updated on
1 min read

தென்சென்னை மாவட்ட பாஜக சார்பில் 'ஒரு நோட்டு.. ஒரு ஓட்டு'பிரச்சாரம் தேனாம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதமான பிரச் சார யுக்திகளை பாஜக கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘மோடி ஃபார் பி.எம் ஃபண்ட்’ என்னும் வித்தியாசமான பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. இதை தமிழக பாஜகவினர் ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ என பெயரிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன்படி தென்சென்னை மாவட்ட பாஜக சார்பில் தேனாம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்தத் திட்டத்தின்படி வாக்காளர்கள் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை கொடுத்தால் அதற்கு பதிலாக பிரச்சாரக் குழு சார்பில் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்ட கூப்பன் கொடுக்கப்படும். தேனாம்பேட்டையில் நடந்த ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ பிரச்சாரத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட பாஜக தலைவர் காளிதாஸ், வணிகர்கள் அணித் தலைவர் ராஜேஷ் கண்ணா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in