

காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கருகும் பயிரைக் காப்பாற் றுவதற்காக கர்நாடகத்திடமிருந்து மத்திய அரசு காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகேதாட்டு, ராசிமணல் அணைக் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தை உழவனின் நில உரிமை இயக்கப் பொதுச் செயலாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.
தமாகா விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் த.புண்ணியமூர்த்தி, சிவகங்கை எம்.அர்ச்சுனன், காவிரி பாசன விவசாயிகள் நலச்
சங்கத் தலைவர் தீட்சிதர் பாலசுப் பிரமணியன், நெல் ஜெயராமன், மீத்தேன் ஜி.வரதராஜன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போராட்டத்தை முடித்து வைத்தார்.