Published : 23 Dec 2020 03:16 am

Updated : 23 Dec 2020 06:51 am

 

Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 06:51 AM

கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

temple-priests-pension

சென்னை

கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:


கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம் குறித்து 2020-21 பட்ஜெட் கூட்டத்தொடரில் பேரவைவிதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்துஇந்து சமய அறநிலையத் துறைஆணையரின் கருத்துருக்களை அரசு பரிசீலனை செய்தது.

இதையடுத்து, கிராமக் கோயில்பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் 20 ஆண்டுபணிபுரிந்து 60 வயது நிறைந்த ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி நிர்ண யம் செய்யப்படுகிறது.

இதற்கென 2021-22 நிதியாண்டு முதல் ஓராண்டுக்கு தொடர் செலவினமாக செலவினத் தொகை ரூ.11.72 கோடி ஒதுக்கீடு செய்தும்,நடப்பு நிதியாண்டில் 4 மாதங்களுக்கு மட்டும் தேவைப்படும் கூடுதல் தொகையான ரூ.3.13 கோடி நிதி ஒப்பளிப்பு செய்தும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.



கிராமக் கோயில் பூசாரிபூசாரிகளின் ஓய்வூதியம்3 ஆயிரமாக உயர்வுஅரசாணை வெளியீடுTemple priests pension

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x