Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன; வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்க சிறப்பு வசதி: தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா தகவல்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக் கான முன்னேற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா, வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்க சிறப்பு வசதி செய்து தரப்படும் என்று கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். இக்குழுவினர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வருமானவரித் துறை யினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து 2-வது நாளாக தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை செயலர் களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா கூறியதாவது:

நேர்மையான, வெளிப்படையான, அனைத்தையும் உள்ளடக்கிய, அமைதி யான, அனைத்து வகையான மக்களும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய பெருந்தொற்று காலகட் டத்தில், பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முன் திட்டமிடல்தான் தேர்தல் ஆணை யத்தின் மந்திரமாகும். குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு முன்னரே தேர்தலுக்கான பணிகள் தொடங்கப் பட்டு விடும்.

தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இது தொடர் நிகழ்வு என்பதால் தற்போதும் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்களர் பட்டியல் வெளியிட்ட பின்பு, பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும். குறிப்பாக மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கும், மறு குடியமர்வு பகுதிகளில் வசிப்போருக் கும் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக் காளர் பட்டியலில் பெயரை சேர்க்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறி வுறுத்தியுள்ளோம். தவறுதலாக யார் பெயரும் நீக்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற் காலிகள், கழிப்பிடம், உரிய கூரை யுடன் கூடிய காத்திருக்கும் பகுதி, மருத்துவம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன், கரோனா தடுப்பு நட வடிக்கைகளும் மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திற னாளிகளுக்கும் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து முன்னேற்பாடுகளும் ஜன.31-க்குள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவது ஆறுதலுக் குரியது. இருப்பினும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளின்போது அனைத்து கரோனா தடுப்பு ஏற்பாடுகளும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போதும் அமைதியான முறை யிலேயே தேர்தல்கள் நடந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் செலவுகள் தொடர்பான பிரச்சினை உள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த திட்டம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

கடும் கட்டுப்பாடுகள், கண்காணிப் புடன் இருக்க அனைத்து அமலாக்க அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் உள்ளிட்டவை மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடு கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்தலுக்கு தேவையான நிதியை மாநில அரசு ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது:

தேர்தலை முன்கூட்டியே நடத்து வதற்கான திட்டம் உள்ளதா?

அடுத்த ஆண்டு மே 24-ம் தேதி சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது. அனைத்து விஷயங்களையும் கருத்தில்கொண்டு ஆணையம் முடிவெடுக்கும். தற்போதே தேர்தல் குறித்து கணிக்க முடியாது.

வயதானவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கும் நடை முறையை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றனவே?

வாக்குச்சாவடி வர இயலாதவர் களுக்கு, குறிப்பாக உடல்நிலை பாதிக் கப்பட்டவர்களுக்கே இந்த வசதி அளிக்கப்படுகிறது. அதேநேரம் அவர் கள் தபால் வாக்களிக்க நிர்பந்திக்க மாட்டாது. இது, சிறப்பு வசதி மட்டுமே. மேலும், இதற்கான வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்படும். தபால் வாக்கு நடைமுறை வெளிப்படையாக இருக்கும். வாக்காளர்கள் ரகசியம் காக்கப்படும். அரசியல் கட்சிகளின் முகவர்களும் அனுமதிக்கப்படுவர்.

கரோனா காலத்தில் தேர்தலை நடத்துவதில் என்ன சவால்கள் உள்ளன?

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கரோனா தடுப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஹாரில் கரோனா நோயாளிகளிடம் இருந்து முன்னரே விண்ணப்பம் பெறப் பட்டு, அவர்களுக்கு தபால் வாக்கு வசதி மற்றும் வாக்குப்பதிவு முடிவுறும் கடைசி நேரத்தில் வாக்களிக்கும் வசதி உள்ளிட்டவை செய்து தரப்பட்டன. இவை அனைத்தும் தமிழகத்திலும் செய்யப்படும்.

தமிழகத்தில் வாக்குச்சாவடி எண் ணிக்கை அதிகரிக்கப்படுமா?

பிஹாரில் அதிகரிக்கப்பட்டதால், அதிக அளவில் வாக்காளர்கள் வாக் களிக்க முடிந்தது. அதேபோல் தமிழகத் திலும் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்படும். வசதி இருந்தால் அதே மையத்தில் கூடுதல் அறை அல்லது அருகில் வேறு இடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பு உயர்த்தப்படுமா?

கரோனா காலத்தில் நடந்த தேர்தல் களின்போது 10 சதவீதம் செலவு வரம்பு உயர்த்தப்பட்டது. தற்போது தேர்தல் செலவின குழுவினர் இதுபற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்கள் மார்ச் மாதத்தில் அறிக்கை அளித்ததும் செலவு வரம்பை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x