புவி வட்டப்பாதையில் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள்

புவி வட்டப்பாதையில் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள்
Updated on
1 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் 2011-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக்கோளின் ஆயுட் காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட நவீன சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைக்கோள், ஹரி கோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் கடந்த 17-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. முதல்கட்டமாக 545 கி.மீ. தொலைவில் தற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின் செயற்கைக்கோளில் உள்ள உந்து விசை மோட்டார்கள் மூலம் உந்தித் தள்ளி, திட்டமிடப்பட்ட இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதைக்கு நேற்று முன்தினம் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் மாற்றப்பட்டது.

தொடக்க நிலை சோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தகவல் தொடர்பு சேவை பணிகளை செயற்கைக் கோள் மேற் கொள்ளும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in