

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தான் வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் ஆதரித்து வருகின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்களது கூட்டணி ஆட்சியை பிடிக்கும். டீசல், பெட்ரோல் விலையை அந்தந்த கம்பெனிகளே முடிவு செய்து உயர்த்தி வருகின்றன. சிலிண்டர் விலை உயர்த்தப்பட் டாலும், அதற்குரிய மானியம் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டம், மத்திய அரசுக்கு எதிராக திட்டமிடப்பட்டு தூண்டிவிடப்பட்ட போராட்டம். அர்பன் நக்சல், தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி களால் நடத்தப்படும் போராட்டம் அது என்றார்.