

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி யில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் படத்துக்கு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், குருவின் தாயார் கல்யாணியிடம் ஆசி பெற்றார். குருவின் மகன் கனலரசனையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் உடன் இருந்தனர். தொடர்ந்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சார பயணம் மேற்கொள்ள அவர் முஷ்ணம் புறப்பட்டார்.