கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து தகவல் இல்லை; என்ஆர் காங்.கில் சலசலப்பு: கூட்டத்தில் பங்கேற்காமல் ரங்கசாமி வெளியூர் பயணம்

கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து தகவல் இல்லை; என்ஆர் காங்.கில் சலசலப்பு: கூட்டத்தில் பங்கேற்காமல் ரங்கசாமி வெளியூர் பயணம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை முன் னிட்டு என்ஆர் காங்கிரஸ் மாநிலக் குழுவில் இடம் பெற்றுள்ள தலைவர்களிடம் தொகுதி பிரதிநிதிகள் சராமரியாக கேள்வி எழுப்பினர்.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது.

என்ஆர் காங்கிரஸூம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் ரங்கசாமி தொகுதி முழுவதும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். தொகுதி நிர்வாகிகளின் கருத்துக்களை அறிய முன்னாள் சபாநாயகர்கள் சபாபதி, பக்தவச்சலம், ஜெயபால் எம்எல்ஏ, பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய மாநிலக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

என்ஆர் காங்கிரஸ் தலைமைஅலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காலாப்பட்டு, லாஸ் பேட்டை,முத்தியால்பேட்டை, உருளை யன்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, உழவர்கரை உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வந்திருந்த ஒரு சிலரும் பல கேள்விகளை எழுப்பினர். கூட்டணி பற்றியும், வேட்பாளர்கள் பற்றியும் கேட்ட கேள்விகளுக்கு பதில் தர இயலவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு தொடங்கியுள்ள சூழலில், கட்சித் தலைவர் ரங்கசாமி கூட்டத்தில் பங்கேற்காமல் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரன் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in