

மதுரை அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இந்த சோதனையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த திருச்சியை சேர்ந்த மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், விடுதி வார்டன் மற்றும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நிறைவடையாததால் மேலும் பல மாணவர்களுக்கு இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது அவர்கள் தொற்று ஏற்பட்டதா? இல்லையா? என்பதை உறுதி செய்யாமல் உறுதியான தகவலை பின்னர் தெரிவிப்பதாகக் கூறினர்.