

கள்ளிக்குடி பகுதியில் அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழில் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் திருமங்கலம் தொகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியம் பகுதியைச் சேர்ந்த சிவரக்கோட்டை, கரிசல்காலம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழில்துறை பூங்காவை உருவாக்க கடந்த 12.6.2009 ஆண்டு கடந்த திமுக ஆட்சியில் இதற்காக 598.66 ஹெக்டேர் (1,478.71 ஏக்கர் ) நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டது
இந்த மூன்று கிராமங்களில் தனித்துவமான கரிசல் மண் இருப்பதால், சிறு தானியங்களான சோளம், ராகி, தினை, உள்ளிட்ட சிறு தானியங்கள் விளைச்சல் உள்ளதால் இப்பகுதி சிறு தானிய களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
எனவே, கையகப்படுத்துதல் அதன் விளைச்சலைப் பாதிக்கும் என்றும் தற்போதைய கையகப்படுத்தும் தளத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள , திருமங்கலம் தாலுகாவில், கப்பலூரில் ஏற்கெனவே சிட்கோ தொழில் பேட்டை செயல்பட்டு வருகிறது
இதனை சுட்டிக்காட்டி நிலம் கையகப்படுத்துவதை ஆட்சேபித்து இந்த 3 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்ற பல கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை கைவிடவும், மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு, கிராம மக்களின் நலனையும், விவசாயகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சிவரக்கோட்டை ,கரிசல்கலம்பட்டி, மற்றும் சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் 598.66 ஹெக்டேர் (1478.71 ஏக்கர்) நிலத்தை கையகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டி அமைச்சர் ஆர் பி உதயகுமாரிடம் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்
இதனைத் தொடர்ந்து முதல்வர் கவனத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து விவசாய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இத்திட்டத்தை ரத்து செய்து தொழில் துறை அரசாணை எண் 268 /20-ன் படி முதல்வர் உத்தரவிட்டார்
இதன் மூலம் தங்களின் நீண்ட வருட கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதல்வருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் இருக்கும் இப்பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று நன்றி தெரிவித்தனர்