

வடதமிழக மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரியில் வறண்ட வானிலைநிலவி வருவதால், பல்வேறு மாவட்டங்களில் குளிர் அதிகரித்துள்ளது. உதகையில் 5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,
‘‘தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதை ஒட்டியஇந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்து வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
வட மாவட்டங்களில் தொடர்ந்துவறண்ட வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மலைப் பிரதேசங்களான உதகையில் 5 டிகிரி, வால்பாறையில் 9 டிகிரி, குன்னூர்,கொடைக்கானலில் தலா 10 டிகிரி,நிலப்பரப்பு பகுதிகளான தருமபுரியில் 16 டிகிரி, கரூர் பரமத்தியில் 17 டிகிரி, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் 18 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது’’ என்றார்.