Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் வழங்கும் திட்டம்: சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அத்துடன் 1.80 லட்சம் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைகளுக்கு ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான தைப்பொங் கலை மக்கள் சிறப்பாக கொண்டாட, ஆண்டுதோறும் பொங்கல் பரிசை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பச் சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொங்கல் தொகுப் புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப் பட்டது. இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. அதுமட்டு மின்றி டெல்டா மற்றும் தென்மாவட் டங்களில் புயல், கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு தைப் பொங்கலை தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, மொத்தமுள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ் வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும். வரும் ஜனவரி 4-ம் தேதியில் இருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 19-ம் தேதி சேலத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 9 அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் ஆகிய வற்றை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். அத்துடன், பொங்கல் பண் டிகையை முன்னிட்டு ரூ.484 கோடியே 25 லட்சம் செலவில் 1 கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல் லூர் ராஜூ, ஆர்.காமராஜ், தலைமைச் செயலர் கே.சண்முகம், உணவுத்துறை செயலர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக் கப்பணம் வழங்கும் திட்டத்துக்காக ரூ.5,604 கோடியே 84 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

யாருக்கு கிடைக்கும்?

கடந்த 19-ம் தேதி நிலவரப்படி தமிழ கத்தில் 2 கோடியே 6 லட்சத்து 15 ஆயி ரத்து 805 அரிசி குடும்ப அட்டைகள் இருந்தன. இதுதவிர, அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய சர்க்கரை அட்டைகள் 3 லட்சத்து 75 ஆயிரத்து 235, இலங்கை தமிழர்களுக்கான 18,923 அட்டைகள் என மொத்தம் ரூ.2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைகள் உள்ளன.

இவற்றில், கடந்த டிச 19-ம் தேதி வரை, சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டையாக மாற்றம் செய்ய 1 லட்சத்து 86 ஆயிரத்து 137 விண்ணப்பங் கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 64 ஆயி ரத்து 83 அட்டைகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. இருப்பினும், அனைத்து சர்க்கரை அட்டைகளும் அரிசி அட்டை களாக மாற்றப்பட்டால் ஆகும் செல வினத்தை கருத்தில்கொண்டே ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளியிடப்பட்ட அரசா ணையில், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தொகுப்பு மற்றும் முழு கரும்பு ஆகிய வற்றை கூட்டுறவு சங்கம் மூலம் கொள் முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x