

ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இலவச அரிசி உட்பட பொது விநியோக திட்ட பொருட்களின் விநியோகம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடையே அவர் பேசியதாவது:
இலவச அரிசி திட்டத்தில் எந்த குறைபாடும், புகார்களுக்கும் இடம் தரக்கூடாது. சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு பொருளையும் பெற வெவ்வேறு நாட்களுக்கு வர வேண்டும் என பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது. சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும். வெளிநபர்கள் யாரையும் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. இதை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்க பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் பதிவாளர் பா.பாலமுருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.