பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தும் வழக்கில் சமூகநலத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தும் வழக்கில் சமூகநலத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

Published on

தமிழகத்தில் பிச்சைக்காரர்களைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் சமூக நலத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நடராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சென்னை, கோவை, மதுரை, நெல்லையில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு அமைக்க 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மறுவாழ்வு மையங்களுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்து பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சமூக நலத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 20-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in