முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கவில்லை என கூறவில்லை: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம்

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கவில்லை என கூறவில்லை: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம்
Updated on
1 min read

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறவில்லை என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக்கூறி வருகிறோம். இதன் மூலம் திமுகவின் போலி முகத்திரை அகற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எங்க
ளின் கட்சித் தலைமைதான் அறிவிக்கும். அதேநேரத்தில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை எனக் கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக பழனிசாமி தற்போது உள்ளார்.

பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார முன்னோட்டமாக வெற்றிவேல் யாத்திரை நடத்தியுள்ளோம். தற்போது 1,000 கூட்டங்களுக்கு மேல் நடத்தி விவசாயிகளை சந்தித்து வருகிறோம். கட்சித் தலைமை அறிவித்தவுடன் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். பாஜகவுக்கு ஏ, பி என எந்த டீமும் இல்லை, பாஜக ஒரே டீம்தான் என்றார்.

பட்டியலினத்தவர் ஒருவரை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே நன்றி என அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in