‘புரெவி’ புயலால் 25 மாவட்டங்களில் 14,557 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதம்

‘புரெவி’ புயலால் 25 மாவட்டங்களில் 14,557 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதம்
Updated on
1 min read

‘புரெவி’ புயலால் 25 மாவட்டங் களில் 14,557 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உழவுத் தொழிலில் தோட்டக்கலை முக்கிய அங்கம் வகிக்கிறது. காய்கறிகள், பழங்கள், கீரைகள், காளான், அலங்காரச் செடிகள், மலர்ச் செடிகள் போன்றவை தோட்டக்கலைப் பயிர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

கரோனா காலத்தில் காய்கறிகள், பழங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாகவும் இவற்றின் சாகுபடி பரப்பளவும், உற்பத்தியும் அதிகரித்தது. இந்நிலையில், அண்மையில் வீசிய ‘நிவர்’ மற்றும்‘புரெவி’ புயல்களால் தோட்டக்கலை பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன.

சிவகங்கையில் அதிக பாதிப்பு

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

‘புரெவி’ புயலால் தமிழகத்தின் 25 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக சிவகங்கையில் 4,097 ஹெக்டேரில் பயிரிடப்பட்டி ருந்த தோட்டக்கலை பயிர்கள்மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள் ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 3,544 ஹெக்டேர், கடலூர் மாவட்டத்தில் 3,229 ஹெக்டேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,312 ஹெக்டேரில் தோட்டக்கலைபயிர்கள் சேதமடைந்துள்ளன.

புரெவி பாதிப்பு கணக்கெடுப் புப் பணி முடிவடைந்துவிட்டது. தருமபுரி, மதுரை, சேலம், தென்காசி, திருச்சி, வேலூர், திருப்பத்தூர் உட்பட 25 மாவட்டங்களில் 14,557ஹெக்டேரில் (சுமார் 37 ஆயிரம் ஏக்கர்) பயிரிடப்பட்டிருந்த தோட்டக்கலைப் பயிர்கள் மழைநீரில் மூழ்கிசேதமடைந்துள்ளன. இதுகுறித்துமத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in