

வரும் சட்டப்பேரவை தேர்தலில் 10 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி சேருவோம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ந.சேதுராமன் தெரிவித்தார்.
அகில இந்திய மூவேந்தர் முன் னணி கழகத்தின் மாநில செயற் குழு கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. ந.சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறியதா வது: பசும்பொன்னில் ரூ.4 கோடி செலவில் நிரந்தர அன்னதான மண்டபம் கட்டுவதற்காக வரும் 30-ம் தேதி அடிக்கல் நாட்டப் பட உள்ளது. அதிமுக கூட்டணி யில்தான் இன்று வரை தொடர் கிறோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் எங்க ளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். கேட்கும் இடங்களை தரும் கட்சிகளுடன்தான் கூட் டணி சேருவோம் என்றார்.