அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்த ஆம்பூர் திமுக எம்எல்ஏ உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்த ஆம்பூர் திமுக எம்எல்ஏ உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

அனுமதியின்றி விளம்பர பதாகை கள் (பேனர்) வைத்ததாக ஆம்பூர் திமுக எம்எல்ஏ உட்பட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகி யோர் மினி கிளினிக்குகளை திறந்து வைத்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்டு வரும் மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப் பினர்களுக்கு அழைப்பு விடுக் காமல் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருவதாக கூறி திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாடப் பள்ளி பகுதியிலும், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி மற்றும் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் நடைபெற்ற மினி கிளினிக் திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக் காததால், அந்நிகழ்ச்சிகளுக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அமைச்சர் கே.சி.வீரமணி தலையீட்டால், திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் அரசு விழாவில் பங்கேற்க தடைவிதிப்பதாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், ஆம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் ஊராட்சி மற்றும் பாலூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.

இதையொட்டி அதிமுகவினர் ஆங்காங்கே விளம்பர பதாகை களை வைத்தனர். இதற்கு, போட்டியாக திமுக சார்பிலும் விளம்பர பதாகைகள் வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்த ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன், மாதனூர் திமுக ஒன்றியச்செயலாளர் சுரேஷ்குமார், மாதனூர் அதிமுக ஒன்றி யச் செயலாளர் வெங்கடேசன், மாதனூர் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஜோதி ராம லிங்கராஜா உட்பட 10 பேர் மீது உமராபாத் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in