பாஜகதான் அதிமுகவின் முதலாளி; அதைத்தான் எல்.முருகன் வெளிப்படுத்தியுள்ளார்: கார்த்தி சிதம்பரம் பேட்டி

கார்த்தி சிதம்பரம்: கோப்புப்படம்
கார்த்தி சிதம்பரம்: கோப்புப்படம்
Updated on
1 min read

பாஜகதான் அதிமுகவின் முதலாளி. அதைத்தான் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளிப்படுத்தியுள்ளார் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

மானாமதுரை அருகே முத்தனேந்தலில் காங்கிரஸ் மேற்கு வட்டாரம் சார்பில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 20) நடைபெற்றது. வட்டாரத் தலைவர் கரு.கணேசன் தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார்.

சட்டப்பேரவை பொறுப்பாளர் சஞ்சய்காந்தி, எஸ்.சி./ எஸ்.டி. மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், மூத்த நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பிறகு கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திமுக தலைமையிலான கூட்டணிக்குப் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைப்பதோடு, வெற்றியும் கிடைக்கும்.

பாஜகதான் அதிமுகவின் முதலாளி. அதனால்தான் பாஜக தலைவர் எல்.முருகன் நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் எனச் சொல்கிறார். இதுவரை எல்லோருக்கும் தெரிந்த, மறைமுகமாக இருந்த விஷயம் தற்போது வெளியே வந்துள்ளது. மானாமதுரை தொகுதியில் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்".

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in