எல்லையைக் கடக்கும் மீனவருக்கு கோடிக்கணக்கில் அபராதம்: இந்திய-இலங்கை இறையாண்மைக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்- மீனவர் கூட்டமைப்பின் நிறுவனர் எச்சரிக்கை

எல்லையைக் கடக்கும் மீனவருக்கு கோடிக்கணக்கில் அபராதம்: இந்திய-இலங்கை இறையாண்மைக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்- மீனவர் கூட்டமைப்பின் நிறுவனர் எச்சரிக்கை
Updated on
1 min read

எல்லையைக் கடந்து மீன்பிடிக்கும் இந்திய, இலங்கை மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக் கப்பட்டால் இரு நாட்டு இறையாண் மைக்கும் அது விபரீத விளைவு களை ஏற்படுத்தும் என்று நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் நிறுவனர் அருளா னந்தம் எச்சரித்துள்ளார்.

இலங்கை மீன்வளத் துறையின் அனுமதி பெறாமல் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர் களுக்கு அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீ காரம் வழங்கியுள்ளது. அதேபோல் எல்லையைக் கடந்து இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை அபரா தம் விதிப்பதற்கு மீன்வளத் துறை சார்பில் யோசனை தெரிவிக்கப்பட் டுள்ளது. இதற்காகப் புதிய சட் டத்தை தயாரிக்க தனிக் குழு அமைக் கப்பட்டுள்ளது என இலங்கை மீன்பிடி அமைச்சகத்தின் இயக்குநர் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் ரூ.40 கோடி அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என மத்திய இணை அமைச்சர் கூறியுள் ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து அருளானந்தம் கூறியதாவது:

இரு நாட்டு மீனவர் பேச்சு வார்த் தைகளின்போதுகூட இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர் களை இழுவலைகளைப் பயன்படுத் தாதீர்கள் என்றுதான் கோரிக்கை விடுத்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை அவர்களும் பிரச்சினையாக்கு வதில்லை. ஏனென்றால் கடலும், நிலப்பரப்பும் ஒன்று கிடையாது. இந்த புரிதல் இந்திய-இலங்கை மீனவர்களிடம் உள்ளது. ஆனால், இத்தகைய புரிதல்கள் இந்திய-இலங்கை அரசு அதிகாரிகளிடமோ, அமைச்சர் களிடமோ கிடையாது. கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என இருநாடுகளும் கூறுவது கண் டனத்துக்குரியது. இது இறை யாண்மைக்கு ஆபத்தாகும்.

இலங்கை உள்நாட்டுப் போருக்கு முன்னர் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கையில் உரிமை பெற்று தலைமன்னாரில் தங்கி மீன்பிடித்து வந்தனர். மீண்டும் இதை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in