பிரான்மலை பகுதியில் தொடர் மழையால் 50 ஏக்கரில் அழுகிய வெங்காயம்

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் தொடர் மழையால் அழுகிய வெங்காயம்.
சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் தொடர் மழையால் அழுகிய வெங்காயம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் தொடர் மழையால் 50 ஏக்கரில் வெங்காயப் பயிர்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சிங்கம்புணரி அருகே பிரான்மலை, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெங்காயத்தில் பூச்சித் தாக்குதலும், அழுகல் நோயும் ஏற்பட்டுள்ளது.

வெங்காய தாழ்கள், வேர்கள் அழுகி வருகின்றன. அப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 50 சதவீதம் பயிர்கள் அழுகிவிட்டதால் கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒடுவன்பட்டி விவசாயிகள் கூறியதாவது: வெங்காயம் குறுகிய கால பயிர் என்பதால் எங்கள் பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்கிறோம்.

பருவநிலையால் இந்தாண்டு பூச்சிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு முன்பாகவே, தொடர் மழையால் பயிர்கள் அழுகி வருகின்றன. ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவழித்துள்ளோம்.

இந்தாண்டு செலவு செய்த தொகை கூட கிடைக்காது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in