தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: திருநெல்வேலிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை- ஆட்சியர் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: திருநெல்வேலிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை- ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலிக்கு இன்று கொண்டுவரப்பட்டன. அவற்றை அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இவற்றை அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுதர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டத்திற்கு வந்ததுள்ளன. நம்மிடம் 20 சதவிகிதம் கூடுதல் இயந்திரங்கள் கையிருப்பு உள்ளது. மொத்தமாக இருந்த இருப்புடன் சேர்த்து 3334 வாக்கு இயந்திரங்கள் உள்ளன.

இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் பெய்துவரும் மழை பற்றி பேசிய அவர், "பாபநாசம் அணையில் இருந்து காலை 11 மணி நிலவரப்படி 3980 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in