சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
Updated on
1 min read

சின்னத் திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரேத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து, பூந்தமல்லி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேம்நாத், பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

சித்ரா தற்கொலை தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்ய கடந்த 14-ம் தேதி முதல்விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் கோட்டாட்சியர் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை செய்தார். பிறகு,ஹேம்நாத் பொன்னேரி கிளைசிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரிந்ததால், புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in