Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றவர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த நபர் திடீரென மாநகரப் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்மஞ்சேரி அடுத்த சோளிங்கநல்லூர் லால் பகதூர் தெருவை சேர்ந்தவர் பானுமதி (63). இவர் வீட்டின் மீது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவர் கல் எறிந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பானுமதி, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் அழைத்ததன் பேரில் சதீஷ்குமார் செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றார்.

அப்போது அங்கு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் யாரும்இல்லை எனக் கூறப்படுகிறது. பணியிலிருந்த முதல் நிலை காவலர் அந்தோணி மேரி, சற்று நேரம்வெளியே காத்திருக்கும்படி சதீஷ்குமாரிடம் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து காவல் நிலைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த சதீஷ்குமார் திடீரென வெளியே சென்று அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு போலீஸாரும், அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். சதீஷ்குமார் மனநலம்பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தகவல் அறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x