

குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு களுக்கு அருகில் நிலை கொண் டுள்ள காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப் பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து, வடகிழக்கு பருவமழையை தமிழகம் எதிர் நோக்கியுள்ளது. இந்த கால கட்டத்தில்தான் தமிழகத்துக்கு அதிகளவு மழை கிடைக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.