ஜன.6-ல் சட்ட படிப்புக்கான அரியர் தேர்வு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஜன.6-ல் சட்ட படிப்புக்கான அரியர் தேர்வு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட சட்டப் படிப்பிற்கான தேர்வுகள் ஜன.6-ம் தேதி பருவத்தேர்வுகளுடன் சேர்த்து நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜனவரி 6-ம் தேதி முதல் பருவத்தேர்வுகளோடு சேர்த்து அரிய தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்

அப்போது மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதுவதால் அரியர் மாணவர்களுக்கான முடிவை மட்டும் தனியே வெளியிடுவதில் சிரமம் இருப்பதாகவும், எனினும் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்..

பல்கலைக்கழகம் வெளியிட்ட அட்டவணைப்படி தேர்வுகளை நடத்தும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும், தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in