அரசுக் கட்டணம் வசூலியுங்கள்: 10-வது நாளாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசுக் கட்டணத்தை வசூலிக்கக் கோரி இன்று (டிச.18) 10-வது நாளாகக் கையில் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பிறகும் மாணவர்களிடம் அரசுக் கல்லூரிக் கட்டணம் வசூலிக்காமல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தினம் கவனத்தை ஈர்க்கும் விதமாக, பல்வேறு வித நூதனப் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள் இன்று இரவு (டிச.18) 10-வது நாளாகக் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை அற வழியில் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இன்று ஷோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ மாணவர்கள் கூறுகையில், ''நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக ஓய்வு நேரத்தில்தான் போராட்டங்களை நடத்தி வருகிறோம்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in