Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

சமூக ஊடகங்கள் மூலம் அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் இளைஞர், இளம்பெண் பாசறையில் உறுதி

அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாசறை செயலளர் விபிபிபரமசிவம் தலைமையில் நடந்த கூட்டத்தில், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன், முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியைஅறிவித்ததற்கு ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதஇட ஒதுக்கீடு கிடைக்க வழிவகைசெய்துள்ளதற்கு முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காகவும், கரோனா காலத்திலும் தமிழகத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 80 ஆயிரம்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியதற்காக வும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக அரசின் சாதனைகள், சமூக நலத் திட்டங்களை சமூக ஊடகங்கள் மற்றும் பிரச்சாரம் மூலம் இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் மக்களிடம் எடுத்துச்செல்லவும், அதிமுக ஆட்சியை தொடர்ந்து 3-வது முறையாக அமைப்பதற்கு உழைக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x