

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இளம் நடிகரான இவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த 2-ம் தேதி காலை5.30 மணியளவில் டிடிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்திடீரென கவுதம் கார்த்திக்கை தாக்கி அவரது விலை உயர்ந்தசெல்போனை பறித்துக் கொண்டுதப்பினர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கவுதம் கார்த்திக் புகார் அளித்தார்.
போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு கவுதம் கார்த்திக்கின்செல்போனை பறித்ததாக 17 வயதுடைய சிறார்களான மயிலாப்பூர் குயில் தோட்டம் மற்றும் கபாலிதோட்டத்தைச் சேர்ந்த 2 பேர்கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.