Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

காஞ்சிபுரம்

தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனதமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் அம்மா கிளினிக்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்தக் கிளினிக்கை தொடங்கிவைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக தற்போது இந்த மாவட்டத்தில் 4 மினி கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன. இந்த கிளினிக்கில் ரூ.1லட்சம் மதிப்புள்ள மருந்துகள் எப்போதும் கையிருப்பில் வைக்கப்படும். 2 படுக்கைகளைக் கொண்டிருக்கும் இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பேர் பணியில் இருப்பர். கிராமப்புற மக்கள் வசதிக்கு ஏற்ப காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த கிளினிக் செயல்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சில வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து தமிழ் எழுத்துகள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்தந்த வங்கிகளிடம் பேசி தமிழ் எழுத்துகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

மேலும், உத்திரமேரூரில் கோயில் திருப்பணியின்போது கிடைக்கப்பெற்ற புதையல் நகைகள் பண்பாட்டு மற்றும் வரலாற்றுரீதியாக எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிவுகள் வந்தவுடன் அந்த நகைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x