

சிவகங்கை சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐ டிக்கு மாற்றப்பட்டதால் நேற்று புதிய வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதில் புதுக்கோட்டை பெண் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகளான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நீதிபதியிடம் சிறுமி ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதில், தந்தை, சகோதரர், போலீஸார் உட்பட 28 பேர் தன்னை பலாத் காரம் செய்ததாகத் தெரிவித்தார். சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த் திக் ஆகியோரை கடந்த ஜூன் 5-ம் தேதி கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த வழக் கறிஞர் வின்சென்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிறுமி பலாத்காரத்தில் போலீஸார் உட்பட பலருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித் திருந்தார். இதையடுத்து மீண்டும் விசாரணையை வேகப்படுத்திய போலீஸார் கடந்த அக். 7-ல் சிவ கங்கை நகர் காவல் நிலைய எஸ்ஐ சங்கர் (55), சிவகங்கையைச் சேர்ந்த முனியாண்டி மகன் சுரேஷ்குமார் (32), சிவகங்கையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் செந்தில்குமார் (36), துரைமணி மகன் அரவிந்த்(25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மறுநாள் அரசு பஸ் நடத்துநர் நமச்சிவாயம், சிவகங்கை நகர் திமுக பொருளாளர் முத்துராக்கு என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கூடுதல் எஸ்பி வந்திதா பாண்டே தலைமை யிலான போலீஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் காவல்துறை அதிகாரிகளும் இருக்கலாம் என தகவல் பரவி வருவதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் அரசுக்கு கோரிக்கைகள் சென்றன.
இதையடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார். சிறுமி என்பதால் பெண் விசா ரணை அலுவலரை நியமிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் ஜெனோவா விசாரணை அதி காரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா, சிபிசிஐடி ஆய்வாளர் சேகர் ஆகியோர் செயல்படவும், மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி மன்மத பாண்டியன் மேற்பார்வை யிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.