

நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்தாலும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது என முன்னாள் அமைச்சரும், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவருமான சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று மாநில வளர்ச்சி திட்டக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற் றது. இதில், திட்டக் குழுவின் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பங்கேற்றார். கூட்டத்துக்கு பின்னர் அவர் , செய்தியாளர்களிடம் கூறும் போது, “தமிழகத்தில் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் வேளாண் உட்பட அனைத்து பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. சுய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது அரசின் நோக்க மாகும்.
சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் உருவாக்கப்படுகின் றன. பொருட்களை உற்பத்திசெய்து, சந்தைப்படுத்தும்போது சுய உதவிக் குழுக்களின் வாழ்வா தாரம் உயரும். நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரக்கூடாது என நாங்கள் (அதிமுக) சொல்ல வில்லை. அரசியலுக்கு வருகிறேன் என 20 ஆண்டுகளுக்கு மேல் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அரசியல்வாதியாகவே சினிமாவுக்கு எம்ஜிஆர் சென்றார்.
ஆனால், நடிகராக இருந்து அரசியலுக்கு வருகிறார் ரஜினி. நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இணைந்தாலும், அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது. தமிழகத் தின் மண்வாசனை என்பது திராவிட கலாச்சாரத்தை கொண்டது. தமிழ் மொழியானது எந்த காலத்திலும் வடமொழியின் திணிப்பு மற்றும் சமஸ்கிருத திணிப்பை ஏற்காது. இது தமிழ்தாயின் மண். தமிழ் பூமியின் மண்வாசனைக்கு ஏற்ற அரசியல்தான் இருக்கும். இந்த மண்ணில் மற்ற அரசியல் வருவது சிரமம்” என்றார்.