Published : 17 Dec 2020 04:27 PM
Last Updated : 17 Dec 2020 04:27 PM

பெரும்பாக்கம் புதிய காவல் நிலையம்: சென்னை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை

தமிழக அரசின் அரசாணையின் பேரில், உருவாக்கப்பட்ட பெரும்பாக்கம் புதிய காவல் நிலையத்தை, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல், பரங்கிமலை காவல் மாவட்டம், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லை பரந்த அளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் இன்னொரு காவல் நிலையம் தேவைப்பட்டது. பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 75,000 நபர்கள், சித்தாலப்பாக்கம் பகுதியில் சுமார் 15,000 நபர்கள் மற்றும் ஒட்டியம்பாக்கம் பகுதியில் சுமார் 10,000 நபர்கள் என சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் மாநகர பேருந்து பணிமனை, பெரும்பாக்கம் துணை மின்நிலையம், சித்தாலப்பாக்கம் துணை மின் நிலையம் என அரசு அலுவலகங்கள், அரசினர் கலைக்கல்லூரி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, மற்றும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் பரிந்துரையின்பேரில், தமிழக அரசு, பள்ளிக்கரணை காவல் நிலைய சரக பகுதிகளில் உள்ள பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் மற்றும் ஒட்டியம்பாக்கம் பகுதிகளுக்கென தமிழக அரசாணைகள் (1.G.O. Ms.No.435 Home (Police 14) department dated 06.06.2018 மற்றும் 2. G.O. Ms.No.366 Home (Police XIV) department dated 29.09.2020)- ன்படி தனியாக S-16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தை தொடங்க உத்தரவிட்டது.

அதன்பேரில், பெரும்பாக்கம், எழில்நகர், 8 மாடி அடுக்கு குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் காவல் நிலையம் தனியாக தொடங்கப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயாராக இருந்தது. இதையடுத்து புதிய காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இன்று (17.12.2020) காலை திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் இக்காவல் நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை வாழ்த்தி, காவல் நிலைய பணிகள் சிறக்கவும், பொதுமக்களின் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

பின்னர் இப்புதிய காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித்குமாரின் செல்போன் எண்களான 9840619597 மற்றும் 9498143067 ஆகியவற்றை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம் என காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர் தினகரன், தெற்கு மண்டல இணை ஆணையர் ஏ.ஜி.பாபு, புனித தோமையர்மலை துணை ஆணையர் பிரபாகர், காவல் அதிகாரிகள், போலீஸார் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்ட 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 138 காவல் நிலையங்களுடன் சேர்த்து 174 வது காவல் நிலையம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x