மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்க: தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச. 17) தன் ட்விட்டர் பக்கத்தில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவமனை அமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் மாநில அரசு முடிவெடுக்க விதிகள் அனுமதிக்காது என்பதால், டெண்டர்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லையோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது.

'பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம்', 'முதல்வரைப் பார்த்து கரோனாவுக்கே பயம்' என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத்துரோகம் செய்ய துணிவது சரியா?

இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in