Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்: 25 மணிநேர கவுன்ட்டவுன் தொடக்கம்

சென்னை

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-50ராக்கெட் இன்று (டிச.17) மதியம் 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

இஸ்ரோ சார்பில் 2011-ம் ஆண்டுசெலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாக அதிநவீன சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கைக்கோள் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் இன்று (டிச.17) மதியம் 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

ராக்கெட் ஏவுதலின் இறுதிக் கட்ட பணிகளுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 2.41மணிக்கு தொடங்கியது.

சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 7 ஆண்டுகளாகும். இதிலுள்ள விரிவுபடுத்தப்பட்ட ‘சி பேண்ட் ’அலைக்கற்றைகள், இந்திய நிலப்பரப்பு பகுதிகளுடன், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத் தீவுகள் வரை தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்கஉதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x