Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

ஏப்.30-க்குள் காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: கிண்டி ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை

சென்னை கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியைவரும் ஏப்.30-ம் தேதிக்குள் காலிசெய்து நிலத்தை உரிமையாளர் களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ள சென்னைஉயர் நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக பதவி வகிக்கும் ராகவேந்திரா கல்விச் சங்கம் சார்பில் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

கிண்டியில் செயல்படும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகத்துக்கும், அந்த நிலத்தின் உரிமையாளர்களான வெங்கடேஸ்வரலு, பூர்ணசந்திர ராவ் ஆகியோருக்கும் இடையே ரூ.1.99 கோடி வாடகை நிலுவைத் தொகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2014-ம் ஆண்டுஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வாடகை பாக்கியை உரிமையாளர் களிடம் செலுத்தவும், 2020 ஏப்ரல்மாதத்துக்குள் அந்த பள்ளியை காலி செய்து நிலத்தை ஒப்படைக்கவும் பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், கரோனா பரவல் காரணமாக மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரி பள்ளி செயலாளரான லதா ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைநீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாகநடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர் தனது ஆஸ்ரம் பள்ளியை வரும் 2021ஏப்ரல் மாதத்துக்குள் அந்த இடத்தில் இருந்து காலி செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் மனுதாரரான லதா ரஜினிகாந்த் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். மேலும், கிண்டி ஆஸ்ரம்பள்ளிக்கு தற்போது இயங்கும் முகவரியில் 2021-22 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது’’ எனராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு தடை விதித்து உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x